Tamil Congregation

Every Friday at 7:00 pm, the Tamil language Eucharist happens at the Anglican Centre. This is an Anglican traditional Tamil Liturgy, with a creche, and a children’s Friday School during the worship. The service is run at the Epiphany Sanctuary.

 

பிரசன்ன தமிழ் ஆங்கிலிக்கன் திருச்சபை

பிரசன்ன தமிழ் ஆங்கிலிக்கன் திருச்சபை தோஹாவிலுள்ள (கத்தார்) பிரசன்ன ஆங்கிலிக்கன் திருச்சபையின் ஏழு சபைகளில் ஒன்றாகும். இச்சபை 2011ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் தொடங்கப்பட்டது. தோஹாவில் வசிக்கும் தமிழ்க் கிறிஸ்தவர்களின் நெடுநாள் ஜெபத்தின் பலனாக இத்திருச்சபை உருவாகியிருக்கிறது. இதன் உறுப்பினர்கள் தென்னிந்திய திருச்சபை, தமிழ் லுத்தரன் திருச்சபை, இலங்கை ஆங்கிலிக்கன் திருச்சபை ஆகிய திருச்சபைகளைச் சேர்ந்தவர்கள்.

இச்சபை உலகளாவிய ஆங்கிலிக்கன் ஐக்கியத்தின் 38 பேராயக்குழுமங்களில் ஒன்றாகிய எருசலேம் மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளின் பேராயக்குழுமத்தின் (The Episcopal Province of Jerusalem and the Middle East) நான்கு திருமண்டலங்களின் ஒன்றாகிய சீப்புரு தீவு மற்றும் வளைகுடா நாடுகளின் திருமண்டலத்தின் (The Anglican Diocese of Cyprus and the Gulf) சபைகளில் ஒன்று.

ஆங்கிலிக்கன் திருச்சபையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வழிபாட்டு முறையும் (Liturgical worship) இறையியலும் (Trinitarian and Reformed) சபை ஆளுகை முறைமையும் (Episcopal) இதன் சிறப்பாகும்.

கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையில் பங்கேற்றுஅன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும்” (எபேசியர் 4:15) வளர்ந்துஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கிற” (கலாத்தியர் 6:2) ஐக்கியத்தில் பெருக இத்திருச்சபை கிறிஸ்துவின் மக்களை அழைக்கிறது. கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்ந்து, அவரது உயிர்த்தெழுதலை அறிக்கையிட்டு அவர் திரும்பி வரக்காத்திருக்கும் சபையாக வாழ்ந்து தூய ஆவியின் கனிகளை இவ்வுலகத்தில் கொடுத்து கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழுவதே இந்தச் சபையின் நோக்கம்.

பல்வேறு பணிகளின் காரணமாகத் தாய்நாடு விட்டு இம்மண்ணில் தற்காலிகக் குடிகளாக வாழும் தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கு அடிப்படைத் தேவையான குடும்பச் சூழலை உருவாக்கி நிறைவான வாழ்வைப் பெற்றுக்கொள்ள ஆழமான பற்றுறுதியை இச்சபை வளர்க்கிறது.

Book your tickets